முஸ்லிம்களை புறக்கணிப்பதற்காக இந்தியா வருத்தப்படும்; அமர்த்தியா சென் உறுதி.! நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவது, நாட்டில் சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைக்கும் அதே வேளையில் பெரும்பான்மை சக்திகளை ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமர்த்தியா சென் அளித்த பேட்டியில் கூறும்போது, ‘‘இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நீதியான அரசியல் மற்றும் நல்ல தேசிய அடையாளத்திற்காக பணியாற்றினார். நான் பார்க்கிற வரையில், பாஜகவின் நோக்கங்களில் ஒன்று (சிஏஏவை அமல்படுத்துவதன் மூலம்) சிறுபான்மையினரின் பங்கைக் குறைப்பதும், அவர்களுக்கு முக்கியத்துவம் குறைப்பதும், நேரடியாகவும் மறைமுகமாகவும், இந்தியாவில் இந்து பெரும்பான்மை சக்திகளின் பங்கை அதிகரிப்பதும் ஆகும். அந்த அளவு சிறுபான்மையினரை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு விரும்பும் சிஏஏ ...