நடிகர் ரன்வீர் - க்கு ஆதரவளிக்கும் திரை பிரபலங்கள் பட்டியலில் இணைந்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர்! நடிகர் ரன்வீர் சிங் - இன் போட்டோஷூட் பற்றி புகார் அளிக்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல திரை பிரபலங்கள் ரன்வீருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரன்வீர் சிங் : பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விடுவார். அதனால், பல சர்ச்சைகளிலும் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். நடிகை தீபிகா படுகோனே- வை காதல் திருமணம் செய்த ரன்வீர், தனது ஃபேஷன் திறனை மிகவும் வித்தியாசமான மற்றும் விமர்சனத்திற்குறிய வகையில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் : ஆனால், சமீப நாட்களாக எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்த நடிகர் ரன்வீர், ஒரு போட்டோஷூட்டை நடத்தி, அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ஒட்டு மொத்த இணைய வாசிகளின் கவனத்தையும் பெற்றுவிட்டார். பிரபல சர்வதேச பதிப்பான தி பேப்பர் மேகசீனின் கவர் புகைப்படத்துக்காக போட்டோஷூட் செய்த ரன்வீர், நிர்வாணம...